சிக்கன் சாட்டே

சிக்கன் சாட்டே

தேவையானவை:

எழும்பில்லாத சிக்கன் - அரைக்கிலோ
மஷ்ரூம் - 3
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
பச்சைமிளகாய் - 10 கிராம்
உப்பு - தேவையான அளவு
மிளகு - காரத்திற்கேற்ப
அஜினமோட்டோ - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - 10 மிலி
தேங்காய்ப்பால் - 10 மி.லி
ஸ்ப்ரிங் ஆனியன் - 10 கிராம்
பெரிய வெங்காயம் - 10 கிராம்

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், ஸ்பிரிங் ஆனியனை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை மீடியம் சைஸில் நறுக்கிக் கொள்ளவும். வானலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் இரண்டாக நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து வதக்கி, சிக்கன் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் உப்பு, அஜினமோட்டோ, மிளகு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் ஸ்ப்ரிங் ஆனியன் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்