மீன் மொய்லி

மீன் மொய்லி

தேவையானவை:

மீன் - 500 கிராம்
(சின்ன கியூப்களாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 2
(மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 10 (இரண்டாக நறுக்கி கொள்ளவும். காரத்துக்கேற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளலாம்)
முதல் தேங்காய்ப்பால் - அரை கப்
இரண்டாம் தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மிள‌காய்த்தூள் - 1 டீஸ்பூன்
வினிகர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 4
மைதா மாவு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
நீளமான தக்காளி ஸ்லைஸ்கள்
- அலங்கரிக்க

செய்முறை:

மீனைக் கழுவி சிறிது மஞ்சள்தூள், உப்பு, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகத் தேய்த்து, அரை மணி நேரம் தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு கப் எண்ணெய் ஊற்றி, மீனை பாதி வேக்காட்டில் பொரித்து எடுத்து எண்ணெயை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் மைதா மாவு, மீதமிருக்கும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு சில நிமிடம் வதக்கவும். இதில் இரண்டாம் தேங்காய்ப்பாலைச் சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், வினிகர், கிராம்பு, பட்டை, உப்பு சேர்த்து குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வேக விடவும். கலவை ஒன்று சேர்ந்து வரும் போது பொரித்த மீனை சேர்த்து, அது கொதிக்க ஆரம்பித்ததும் முதல் தேங்காய்ப்பாலைச் சேர்த்துக் கலக்கி அடுப்பை அணைக்கவும். எக்காரணம் கொண்டும் கொதிக்க விடக்கூடாது. இறுதியாக தக்காளி ஸ்லைஸ் கொண்டு அலங்கரிக்கவும்.