நெத்திலி மீன் குழம்பு

நெத்திலி மீன் குழம்பு

என்னென்ன தேவை?

நெத்திலி மீன் - 300 கிராம்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
புளி தண்ணீர் - 3 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

அரைக்க...

தேங்காய் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

மிக்ஸி ஜாரில் தேங்காய், பெருஞ்சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக மசித்துக் கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய், மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், பின் வெங்காயம், பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து வறுக்கவும், அதனுடன் தக்காளி சேர்த்து வேகவிடவும். பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து மற்றும் நல்ல நறுமணம் மசாலாவில் இருந்து வரும் வரை சமைக்க வேண்டும். பின் புளி தண்ணீர் ஊற்றி கலக்கவும், எண்ணெய் மேலே மிதக்கும் வரை சமைக்கவும். சுத்தப்படுத்தபட்ட மீன்னை சேர்த்து கலக்கவும். 5 நிமிடங்கள் நன்கு வேகவிடவும், பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.