செட்டிநாடு முட்டைக் குழம்பு

செட்டிநாடு முட்டைக் குழம்பு


தேவையானவை:

சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) -
2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டை - 4
சோம்பு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, சீரகம் சேர்த்துத் தாளித்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் மல்லித்தூள்(தனியாத்தூள்), மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். குழிவான கரண்டி ஒன்றை எடுத்து, இதன் உட்புறம் சிறிது எண்ணெய் ஊற்றி, தீயில் காண்பித்து எண்ணெய் சூடானதும் முட்டையை உடைத்து கரண்டியில் ஊற்றி, இதை கொதித்துகொண்டிருக்கும் குழம்பில் ஊற்றவும். மூடி போட்டு ஐந்து நிமிடம் குழம்பை வேக விடவும். இதில் காரத்துக்கு ஏற்ப மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.