நண்டு மிளகுச் சாறு

நண்டு மிளகுச் சாறு

தேவையானவை:

நண்டு - ஒரு நண்டு
சின்னவெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு -கால் டீஸ்பூன்
இடித்த பூண்டு - 5
இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
தனி மசாலா:
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்

செய்முறை:

தனி மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விடாமல் வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளுங்கள். நண்டை நான்காக வெட்டி நன்கு கழுவி வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வத‌க்கி நண்டை சேர்த்து மஞ்சள்த்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதக்குங்கள். இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். கிரேவி ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்த மசாலாவைச் சேர்த்து உப்புப் போட்டு, ஐந்து நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.