மீன் மிளகாய் மாசாலா

மீன் மிளகாய் மாசாலா

என்னென்ன தேவை?

வௌவால் மீன் - 800 கிராம்
வெங்காயம் -2
தக்காளி -2
பூண்டு - 50கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 2ஸ்பூன்
சிவப்பு மிளகாய் -12
புளி கரைசல் - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 கப்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு

எப்படி செய்வது?

ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் ஊற்றி சிவப்பு மிளகாய் போட்டு வேகவைத்து ஒரு பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். மிளகாய், 2 முழு பூண்டு சேர்த்து மிக்ஸரில் அரைத்து வைக்கவும். மீன் மீது கொஞ்சமாக மஞ்சள் தூள், உப்பு சேர்த்து லைட்டாக பொரித்து எடுத்து வைக்கவும். மீன் பொரித்த எண்ணெயில் பூண்டை போட்டு பொரிக்கவும். சிறிது பொரிந்ததும் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து லைட்டாக வதக்கினால் போதும். தக்காளி சேர்த்து பாதியளவு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை கலந்து கிளறி அதில் புளி தண்ணீரை ஊற்றி பத்து நிமிடங்கள் வேகவிடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் பொரித்து வைத்துள்ள மீனை குழம்பில் போட்டு 5நிமிடங்கள் ஆனதும் இறக்கினால் சுவையான மிளகாய் மசாலா ரெடி.