மீன் பொளிச்சது

மீன் பொளிச்சது

தேவையானவை:

வவ்வால் மீன் - 250 கிராம்
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சை - ஒன்று (சாறு எடுத்துக் கொள்ளுங்கள்)
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 10
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்று
தேங்காய்ப்பால் - ஒரு குழிக்கரண்டி
வாழை இலை - 1
எண்ணெய் - வறுப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மீனை நன்கு அலசி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இதனை மீனில் தடவிக் கொள்ளுங்கள். அடுப்பில் பேனை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மசாலா தடவிய மீனை வைத்து தீயைக் குறைத்து இருபக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் மற்றொரு கடாயை வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கூடவே பச்சை மிளகாய்ச் சேர்த்து வதக்குங்கள். இதில் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து ஜூஸியாக வதக்கி தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து தொக்கு ப‌தத்துக்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

தயாரித்த கிரேவியை வாழை இலையில் தடவி அதன் மேல் வறுத்த மீனை வைத்து மீனின் மேல் மீண்டும் கிரேவியைத் தடவி கொள்ளுங்கள். வாழை இலையை மூடி சின்ன கேப் கூட இல்லாத அளவுக்கு டூத்பிக் பயன்படுத்தி குத்தி விடுங்கள். அடுப்பில் தவாவை வைத்து லேசாக எண்ணெய் விட்டு ஒவ்வொரு புறமும் ஐந்து நிமிடம் என பத்து நிமிடத்தில் இரண்டு பக்கமும் மீனைக் குறைந்த தீயில் வேக வைத்து, இலை பிரித்துப் பரிமாறுங்கள்.