கறி ஆனம்

கறி ஆனம்

தேவையானவை:

கோழிக்கறி (சிக்கன்) (அ) ஆட்டுக்கறி (மட்டன்) - அரை கிலோ
தயிர் - 200 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
தனி மிளகாய்த்தூள், கறிமசாலாத்தூள் - தலா 2 டீஸ்பூன்
சிறிய தேங்காய் - ஒரு மூடி (பால் எடுக்கவும்)
உருளைக்கிழங்கு - தலா 2
மஞ்சள்தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய், தேங்காய் எண்ணெய் -
50 கிராம்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
சின்ன வெங்காயம் - 10 (இரண்டாக நறுக்கவும்)

செய்முறை :

கோழிக்கறியைக் கழுவி இதனுடன், பச்சை மிளகாய், தயிர், மிளகாய்த்தூள், கறிமசாலாத் தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து தாளித்து வெங்காயத்தைச் சேர்த்து மிதமாக வதக்கவும். இத்துடன் இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்துத் சிம்மில் வைத்து வதக்கவும். இதில் வெந்த கறிக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வேளையில், தேங்காய்ப்பால், நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து மூடி போட்டு 2 விசில் வரை வேக விட்டு இறக்கிப் பரிமாறவும்.