கெண்டகி சிக்கன்

கெண்டகி சிக்கன்

தேவையானவை:

சிக்கன் லெக் பீஸ் - 2 துண்டுகள்
மிளகாய்த்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்
மிளகுத்தூள் - 5 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
எலுமிச்சைப்பழம் - அரை பழம் (சாறு எடுக்கவும்)
இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
கடலைமாவு - 10 கிராம்
அரிசிமாவு - 5 கிராம்
கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
வெள்ளை எள் - 5 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 5 கிராம் (பொடியாக நறுக்கவும்)
குடமிளகாய் - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)
வெங்காயத்தாள் - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)
காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து
10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது). வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும். அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கவும்.

குறிப்பு:
தக்காளி கெட்சப் சேர்த்து சாப்பிட்டால், கெண்டகி சிக்கனின் ருசி தூக்கலாக இருக்கும்!