பொரிச்ச கறி

பொரிச்ச கறி

தேவையானவை:

மட்டன் - அரை கிலோ
தயிர் - 4 டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
தேங்காய் விழுது - 2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 4 (இரண்டிரண்டாக நறுக்கவும்)
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு- தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
எண்ணெய்/நல்லெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் குக்கரில் ஒன்றாகச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வரை வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் இருந்தால் வற்ற விடவும். இதில்
5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும். எண்ணெய் ஊற்றுவதால், இதற்கு ‘பொரிச்ச கறி’ என்று பெயர்