கறிவேப்பிலை இறால்

கறிவேப்பிலை இறால்

தேவையானவை:

இறால் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் மாவு - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ஒன்றில் பாதி
பச்சைமிளகாய் - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
முட்டை - ஒன்று (உடைத்து நன்கு கலக்கி வைக்கவும்)
பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து கொள்ளவும். தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எலுமிச்சைச் சாறு தவிர்த்து, மற்ற எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊறிய இறாலைச் சேர்த்துப் பொரித்தெடுத்து வைக்கவும். பரிமாறும் போது எலுமிச்சைச்சாறு தெளித்துப் பரிமாறவும்.