பலாக்காய் மீன் கறி

பலாக்காய் மீன் கறி

தேவையானவை:

அயிரை மீன் - 500 கிராம்
பலாக்கொட்டை - 4 (நீளமாக நறுக்கியது)
பலாக்காய் - 4 (நீளமாக நறுக்கியது)
புளி - 15 கிராம் (கரைத்து வைக்கவும்)
உப்பு- தேவையான அளவு

வறுத்தரைக்க:

மல்லி (தனியா) - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
தேங்காய் - 1 மூடி
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
கறிவேப்பிலை - சிறிது

தாளிக்க:

கடலை எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
நீளமாக நறுக்கிய பூண்டு - 4
கீறிய பச்சை மிளகாய் - 2

செய்முறை:

எண்ணெய்ச் சட்டியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு, வறுத்தரைக்கத் தேவையானவற்றைச் சேர்த்து வறுத்து, ஆறியதும், மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும். அதே எண்ணெய்ச் சட்டியில் எண்ணெய் விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்துத் தாளித்து புளித்தண்ணீரைச் சேர்த்து, பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இதில் அரைத்த மசாலா, உப்பு, பலாக்கொட்டை, பலாக்காய் சேர்த்துக் கொதிக்க விடவும். இவை வெந்ததும், மீனைச் சேர்த்து வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.