சைனீஸ் கிரவுண்ட் பீன் ரெட் ஸ்னாப்பர்

சைனீஸ் கிரவுண்ட் பீன் ரெட் ஸ்னாப்பர்

தேவையானவை:

ரெட் ஸ்னாப்பர் (சங்கரா மீன்) - 2 முழு மீன்
நீளமாக நறுக்கிய சின்னவெங்காயம் - 10
குடமிளகாய் பொடியாக நறுக்கியது - ஒன்றில் பாதி
பொடியாக நறுக்கிய இஞ்சி - 10 கிராம்
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
பூண்டு - 10 துண்டு பொடியாக நறுக்கியது
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
கிரவுண்ட் பீன் சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ - ஒரு சிட்டிகை
ஸ்பிரிங் ஆனியன் - அலங்கரிக்க‌
எலுமிச்சை - 1
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

மீனைக் கழுவி எலுமிச்சைச்சாறு மற்றும் மீனுக்குத் தேவையான உப்பைச் சேர்த்து இருபது நிமிடம் ஊற வையுங்கள். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சின்னவெங்காயம் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இதில் பொடியாக நறுக்கிய குடமிளகாய்ச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கழுவி வைத்த மீனை முழுதாகச் சேர்த்து மெதுவாக வதக்குங்கள். சோயா சாஸ், கிரவுண்ட் பீன் சாஸ், சர்க்கரை, அஜினமோட்டோ மற்றும் சிறிதளவு தண்ணீரை கடாயில் தெளித்து, குறைந்த தீயில் மீனை இரண்டு பக்கமும் மொத்தமாக ஆறு நிமிடம் வேக வைத்து இறக்கி, ஸ்பிரிங் ஆனியன் தூவிப் பரிமாறுங்கள்.