முட்டை வட்டில் ஆப்பம்

குழந்தைகளுக்காக: முட்டை வட்டில் ஆப்பம்
முட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாகவும் ஒரு இனிப்பு அப்பம், முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று பாரப்போம்.
தேவையான பொருட்கள் :
முட்டை - 5
சர்க்கரை - அரை கப்
தேங்காய்ப்பால் - அரை கப்
முந்திரி - 2 டீஸ்பூன்
நெய் - கால் கப்
செய்முறை :
முதலில் முந்திரியை சிறிய துண்டுகளாக ஒடித்துகொள்ளுங்கள்.
இந்த ஒடித்த முந்திரி துண்டுகளை சிறிது நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் தேங்காய்ப்பால் + சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கி/அடித்துக் எடுத்துக்கொள்ளுங்கள்.
இப்போது வருத்த முந்திரியை சேர்த்து நன்கு கலக்குங்கள்.
பெரிய தட்டு அல்லது ஏந்தலான பாத்திரம் ஒன்றில் ஊற்றி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து, ஆவியில் வேகவிடுங்கள். இப்போது சுவையான 'முட்டை வட்டில் அப்பம்' ரெடி.
கத்தியால் வெட்டி, துண்டுகள் போட்டுப் பரிமாரவேண்டியது தான் பாக்கி. சும்மா பஞ்சு போல அருமையான மென்மையான ருசியான அப்பம் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.