சின்ன வெங்காயம் உப்புக் கறி

சின்ன வெங்காயம் உப்புக் கறி

தேவையானவை:

சிக்கன் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய தக்காளி - 50 கிராம்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

சோம்புத்தூள் - கால் டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 120 மிலி

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்

செய்முறை:

சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் பேனை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்னவெங்காயம் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து மைய வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சோம்புத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் சிக்கனைச் சேர்த்து பதினைந்து முதல் இருபது நிமிடம் நன்கு வேக விட்டு இறக்கி கொத்தமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.