இறால் & சோளம் சாதம்

இறால் & சோளம் சாதம்

சாதம் - 1 கப்
இறால் - 5
சோளம் - 1/4 கப்
வெங்காயம் நீளவாக்கில் அரிந்தது - 2 மே.க
பீன்ஸ் பேஸ்ட் - 1 மே.க
தக்காளி பேஸ்ட் - 1/2 மே.க
மல்லியிலை - 1/2 மே.க
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 1/2 மே.க
உப்பு தேவையான அளவு.

அடுப்பை பற்ற வைத்து,சட்டியை வைத்து அதில் சோள எண்ணெய்/ தேங்காய் எண்ணெய் விட்டு சிறிது சூடாக்கவும்.

எண்ணெய் சூடானதும் இறாலை போட்டு பாதி அவியும் வரை கிளறவும்.

இறாலை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

அதே சட்டியில் வெங்காயத்தையும், மிளகாயையும் போட்டு வதக்கவும். சிறிதளவு வதங்கியதும் அதில் சோளத்தை சேர்க்கவும்.

ஒரு நிமிடத்தின் பின்னர் பீன்ஸ் பேஸ்ட் & தக்காளி பேஸ்ட் & உப்பு சேர்த்து கொதிக்க விடவும். [பீன்ஸ் பேஸ்டில் உள்ள காரம் பிரச்சனை பண்ணக்கூடாது இல்லையா]

ஒரு நிமிடம் போதுமானதாக இருக்கும். பின்னர் அதிலேயே இறாலை போட்டு இன்னொரு நிமிடம் கொதிக்க விடவும்.

இறால் இப்போது அவிந்து வந்திருக்கும். ஏற்கனவே 'இருக்கா/இல்லையா' என சோதித்து பார்த்த சாதத்தை அதில் கொட்டி நன்றாக கிளறி இறக்கவும்.

இறக்கி சூடாக இருக்கும் போதே மல்லி இலையை மேலே தூவி விடுங்கள். சுவையான fried rice ஆயத்தம் ஆகிவிடும்.